அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்ப்புக்கு அர்ப்பணித்த மரியா மச்சாடோ!
வெனிசுவேலாவின் மனித உரிமைப் போராளியான மரியா கொரினா மச்சாடோ, 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றதற்குப் பிறகு அதனை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கே அர்ப்பணிக்கிறேன் எனக் கூறியுள்ளார். வெனிசுவேலாவில் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டும் பணிக்காகவே இந்த விருது வழங்கப்பட்டது.
மச்சாடோவின் இந்த அறிவிப்பு, உலகளவில் கவனத்தை பெற்றுள்ளது. ஏற்கனவே பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்தவர் என டிரம்ப் தனது ஆட்சிக்காலத்திலேயே நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் அந்த பரிசை பெறவில்லை. இந்நிலையில், மரியா மச்சாடோ தனது எக்ஸ் (முந்தைய ட்விட்டர்) பக்கத்தில் இந்தப் பரிசை டிரம்புக்கும், வெனிசுவேலா மக்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வெனிசுவேலாவின் சுதந்திரத்திற்கு முன்னோடி தேவை எனவும், இந்தப் பரிசு அந்தப் பயணத்தில் ஒரு ஊக்கமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனது போராட்டத்திற்கு அமெரிக்கா, டிரம்ப் மற்றும் உலக நாடுகளின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
