மாரிமுத்து நல்ல மனிதர்.. ரஜினிகாந்த் இரங்கல் ட்வீட்!!

 
மாரிமுத்து

சின்னத்திரை நடிகர் மாரிமுத்து . இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் வீடுதோறும் குடும்பத்தில் ஒருவராகிவிட்டார். இந்தாம்மா ஏய் என இவர் அழைக்க தொடங்கும் போதே ரசிகர்கள் ஆரவாரம் செய்யத் தொடங்கி விடுகின்றனர். இவர் இன்று காலை டப்பிங் பேசிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

தேனி மாவட்டம் வருஷநாடு பகுதி பசுமலை கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் நடிகர் மாரிமுத்து. திரைத்துறையில் பணியாற்றுவதற்காக சென்னை வந்த நடிகர் மாரிமுத்து, கவிப்பேரரசு வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றினார். பின்னர் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.  ராஜ்கிரணிடம் அரண்மனை கிளி, எல்லாமே என் ராசாதான் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா, ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.\

மாரிமுத்துவின் மறைவு திரையுலகினரை  பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சின்னத்திரை நடிகர், நடிகைகள், திரையுலக நட்சத்திரங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.   இந்நிலையில் ரஜினிகாந்த் அவரது ட்விட்டர்  பக்கத்தில், "மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி" எனப் பதிவிட்டுள்ளார்.  

 இன்று காலை டப்பிங் பணிகளை முடித்து விட்டு, வீடு திரும்பும் போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினியின் ‘ஜெயிலர்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.  
இயக்குனர் வஸந்திடம் உதவியாளராக பணிபுரிந்தவர்.  இவர்  கண்ணும், கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியவர். அத்துடன்   50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

மாரிமுத்து


பரியேறும் பெருமாள், விக்ரம், ஜெயிலர் என பல வெற்றிப்படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொலைக்காட்சி தொடர்  மூலம் பட்டிதொட்டியெங்கும் புகழ் பெற்றவர். இவரது திடீர் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், நண்பர்கள் , ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  சென்னையில் உள்ள இவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.  இறுதிச் சடங்கிற்காக சொந்த ஊரான  தேனி எடுத்துச் செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web