கடல் மாநாடு.. படகில் சென்று பார்வையிட்டார் சீமான்!
மரங்கள் மாநாடு, கால்நடை மாநாடு, மலைகள் மாநாடு நடத்தி முடித்துள்ள நிலையில், தற்போது சீமான் கடல் மாநாடு நடத்த உள்ளார்.
கடந்த மாதம் நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிம் ஆடு, மாடுகள் மாநாடுகளை தொடர்ந்து அடுத்தகட்ட மாநாடு என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து பேசிய சீமான், “அடுத்ததாக தூத்துக்குடியில் கடல் மாநாடு, தஞ்சையில் தண்ணீரின் மாநாடு நடத்தப்போகிறோம். ஐம்பூதங்கள் இல்லாமல் பூமியில் எந்த உயிரினங்களும் இருக்காது” என்று கூறினார்.
ஏற்கனவே சீமான் மரங்கள் மாநாடு, கால்நடை மாநாடு, மலைகள் மாநாடு நடத்தியுள்ள நிலையில், தற்போது கடல் மாநாடு நடத்த உள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் அமளி நகர் மீனவ கிராமத்தில் இருந்து மீன்பிடி படகு மூலம் மீனவர்களுடன் கடலுக்குள் சீமான் சென்றுள்ளார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
