தாயின் கல்லறை முன் திருமணம்... உறவினர்களை நெகிழ வைத்த மகன்!

 
காயத்ரி

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே, தனது அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தன்னுடைய திருமணத்தை நடத்தி, மணமகளின் கழுத்தில் தாலியைக் கட்டி புதுவாழ்வு துவங்கிய மகனின் செயல், திருமணத்திற்கு வாழ்த்த வந்திருந்த உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களது மகன் தினேஷ்குமார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், உடல்நலக் குறைவு காரணமாக தினேஷ்குமாரின் தாயார் ஈஸ்வரி அம்மாள் காலமானார். இதையடுத்து, இவர்களது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மாங்குடி கிராமத்தில் ஈஸ்வரி அம்மாளின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து தனது மனைவி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அவருக்கு மணிமண்டபம் கட்டி கணவர் முருகன், மகன் தினேஷ்குமார் மற்றும் உறவினர்கள், ஈஸ்வரி அம்மாளை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். 

தினேஷ்குமார்-காயத்ரி தம்பதி

இந்நிலையில் தினேஷ்குமாருக்கும் மதுரையைச் சேர்ந்த கண்ணன் மற்றும் விஜி தம்பதிகளின் மகளான காயத்ரி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மறைந்து விட்ட தனது தாயார் முன்னிலையில், திருமணம் செய்து கொள்ள விரும்பிய தினேஷ்குமார், அது குறித்து தனது தந்தையிடமும், பெண் வீட்டாரிடமும் கூறியிருக்கிறார். தினேஷ்குமாரின் விருப்பத்தை அறிந்து, இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் ஈஸ்வரி அம்மாளின் நினைவிடத்தில் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

தினேஷ்குமார்-காயத்ரி தம்பதிகளை வாழ்த்தும் தந்தை முருகன்

இதைத் தொடர்ந்து இன்று காலை தினேஷ்குமாருக்கும், காயத்ரிக்கும் ஈஸ்வரியம்மாளின் கல்லறையின் முன்பு திருமணம் நடைபெற்றது. வாழ்த்த வந்திருந்த உறவினர்கள், மறைந்த தாயின் மீதான அன்பு காரணமாக, அவரது கல்லறை முன்பே மகன் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் பேசினார்கள். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web