வைரல் வீடியோ.... பிரபல சீரியல் நடிகருக்கு திருமணம்!!

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் டாப் டிரெண்டிங்கில் இருந்த சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தான். டிஎன்ஏ டெஸ்ட் என்ற ஒன்றை மைய புள்ளியாக வைத்து இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. குழப்பமான கதைக்களம் என்றாலும் வித்தியாசமான நகர்வுக்காக இந்த சீரியலுக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலின் பாரதியின் தம்பி அகிலன் கேரக்டரில் நடித்து வந்தவர்தான் அகிலன். ஆனால் இவர் பாதியில் சீரியலை விட்டு நிறுத்திவிட்டு சினிமாவில் களம் இறங்கினார்.
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் விஷாலின் தங்கை காதலனாக நடித்திருந்தார். சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புக்கள் தேடி வருகின்றன. இவர் நடிகராக விரைவில் வெற்றி பெறுவார் எனக் கூறிவந்த நிலையில் அதிகமான திரைப்படங்களில் அவரது காட்சிகள் நீக்கப்பட்டன. ஆனால் எப்போதும் சமூக வலைத்தளத்தில் எப்போதும் போல ஆக்டிவாகவே இருந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் அகிலன் தற்போது தனது காதலியான அட்ஷயா முரளிதரனை திருமணம் செய்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டா பதிவில் அட்ஷயாவுட்ன எடுத்த திருமண புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவை சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. சீரியல் நடிகர்கள், நட்சத்திரங்கள், உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!