பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம்!! வைரல் புகைப்படங்கள்!!

 
ஜனனி

பெரியதிரைக்கு கொஞ்சமும் குறையாமல் சின்னத்திரையிலும் அனைத்து அதிரடி சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. சினிமா நடிகர் , நடிகைகளை போல்  சீரியல் நடிகர், நடிகைகளும் காதலித்து திருமணம் செய்து கொள்வது டிரெண்டாகி வருகிறது.   மெட்டி ஒலி சேத்தன் - பிரியதர்ஷினி, சரவணன் மீனாட்சி செந்தில் - ஸ்ரீஜா, ராஜா ராணி சீரியலில் நடித்த சஞ்சீவ் - ஆலியா மானசா,   சித்து - ஷ்ரேயா வரிசையில்  ஜனனி பிரதீப் , இனியனை காதலித்து திருமணம் செய்துள்ளார். 

ஜனனி
சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிவா மனசுல சக்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஜனனி பிரதீப். இவர் தன்னுடன் ஆல்பம் பாடலில் நடித்த யூடியூப் பிரபலம் இனியனை காதலித்து வந்தார். இருவரும் தங்களது காதலை உறுதி செய்யும் வகையில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை  பதிவிட்டு வந்தனர். அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளப்போவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தனர்.  


காதலை அறிவித்த ஒரே மாதத்தில்  இனியன் - ஜனனி பிரதீப் ஜோடியின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.இந்த திருமணத்தில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிபிரியா, சூப்பர் சிங்கர் பிரபலம் சாம் விஷால் உட்படசின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டர். இனியன் - ஜனனி பிரதீப் ஜோடியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

ஜனனி
காதல் திருமணம் செய்துகொண்ட இனியன் - ஜனனி பிரதீப் ஜோடிக்கு ரசிகர்கள் பாராட்டுக்களையும்,  வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இனியன், வித்யா நம்பர் ஒன் என்கிற சீரியலில் சஞ்சய் கதாபாத்திரத்தில் நடித்தவர் அத்துடன் விஜய் டிவியில் ஒளிபரப்பான முரட்டு சிங்கிள்ஸ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம்  பாப்புலர் ஆனவர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web