16 வயதில் திருமணமாகி கர்ப்பம்... திருமணத்தை மறைக்க ரூ.50,000 லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர்!

 
குழந்தை திருமணம் பால்ய லஞ்சம்

16 வயதில் காதல் திருமணம் செய்துக் கொண்டு,  கர்ப்பமடைந்த மாணவியின் திருமணத்தை மறைக்க ரூ.50,000 லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

தர்மபுரி பகுதியை சேர்ந்தவர் நிர்மல்குமார். இவர், 16 வயது சிறுமியை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்தார். இந்த நிலையில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து அந்த சிறுமியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது தான் சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்துள்ளதும், அதில் அந்த சிறுமி கர்ப்பமானதும் மருத்துவர்களுக்கு தெரிய வந்தது.

திருமணம்

இது குறித்து தகவல் அறிந்த சமூக நலத்துறையினர் மருத்துவமனையில் விசாரித்து, பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் (50 வயது) சிறுமியின் குடும்பத்தினரை அழைத்து விசாரித்தார். அப்போது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் சிறுமியின் குடும்பத்தை சேர்ந்தவர்களை கைது செய்யாமல் இருக்க ரூ.50,000  லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இது குறித்து தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் நேற்று புகாரளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின் பேரில், ரசாயன பவுடர் தடவிய ரூ.50,000 பணத்தை பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் வீரம்மாளிடம் சிறுமியின் தாயார் கொடுத்தார்.

குழந்தை திருமணம்

அப்போது அங்கு மறைந்திருந்த தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாளை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?