இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்... மறுபடியும் மொதல்...ல இருந்தா!!

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே மழைக்கால நோய்கள் வேகமெடுக்க தொடங்கிவிட்டன. தமிழகத்தின் அண்டை மாநிலமாம் கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இதன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுச்சேரி, மாஹே பகுதிகளில் தடுப்பு முறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து மாஹே பிராந்திய மண்டல நிர்வாக அதிகாரி சிவராஜ் மீனா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் சமீபத்தில் நிபா வைரஸ் காரணமாக 2 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகள் புதுச்சேரியின் மாஹே பகுதிக்குமிக அருகில் உள்ளது.
பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் நெரிசலான பகுதியில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
விழாக்கள், கூட்டங்களை ஒத்தி வைக்கலாம்.
உரிய அனுமதி பெற்று வழிகாட்டு நடைமுறைகளை கடைப்பிடித்து விழாக்கள் , கூட்டங்கள் நடத்தலாம்.
தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.
கடற்கரை, பூங்கா, மால்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
பொது இடங்கள், வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும்.
அடிக்கடி சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!