கேரளத்தில் நிபா வைரஸ்: மாஸ்க் கட்டாயம்; திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே அனுமதி... கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன!

கேரளத்தில் நிபா வைரஸ் பரவல் அதிகரிக்க துவங்கியிருக்கும் நிலையில், மலப்புரம் அனக்காயம் மற்றும் பாண்டிக்காடு ஊராட்சிகளில் கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்து வைத்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று திருமணம் போன்ற முக்கிய விழாக்களில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்தன.
கேரளத்தில் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அடுத்த அதிர்ச்சியாக 68 வயதான மலப்புரம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நிபா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம், கோழிக்கோடு மலப்புரத்தில் மேலும் ஒருவருக்கு வவ்வால் மூலம் பரவும் நிபா வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்டுள்ளது. மலப்புரத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் தற்போது கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நிபா வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி ம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நேற்று நிபா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த 14 வயது மலப்புரம் சிறுவனின் தொடர்பு பட்டியலில் இவர் இல்லை என்பது மேலும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், சிறுவனின் உடல் மலப்புரத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் நிபா நெறிமுறையின்படி அடக்கம் செய்யப்பட உள்ளது. கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் இறந்தவரின் பெற்றோருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அவரது இறுதிச் சடங்குகளை மலப்புரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மலப்புரம் அனக்காயம் மற்றும் பாண்டிக்காடு ஊராட்சிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். திருமண விழாக்களில் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ள அனுமதி இல்லை. பஞ்சாயத்துகளில் வசிப்பவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் அனைவருக்கும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இரண்டாம் நிலை தொடர்பு பட்டியல் விரைவில் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா