18 ஆண்டுகள் கழித்து மயூரநாதர் கும்பாபிஷேகம்!! குவிந்த பக்தர்கள்!!

 
கும்பாபிஷேகம்

மயிலாடுதுறையில்  1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயாம்பிகை உடனாகிய மயூரநாதர் கோவில் அமைந்துள்ளது.  இந்தக் கோவில் பாடல் பெற்ற திருத்தலம்.   பார்வதி தேவி மயில் உருவம் எடுத்து சிவபெருமானை பூஜித்த பெருமைக்குரிய ஸ்தலமாக காணப்படுகிறது. இத்தனை பெருமைகளையுடைய இக்கோவிலில்  2022ல் கோவிலை புதுப்பிக்கும் பணி தொடங்கியது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மயூரநாதர் ஆலய கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகம்


8 கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, கங்கை, யமுனை, சிந்து, காவிரி உட்பட   9 நதிகளில் இருந்து தீர்த்தங்கள் மயிலாடுதுறைக்கு கொண்டுவரப்பட்டு துலாக்கட்ட காவிரியில் இருந்து மேளதாளம் முழங்க யானை மீது வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வந்து புனித நீர் கோயிலை வந்தடைந்தது.

கும்பாபிஷேகம்


 இதனையடுத்து புனித குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் மக்கள் சூழ வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்  உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web