மங்கோலியாவில் தட்டம்மை பரவல் தீவிரம் ... 13,500 பேருக்கு மேலான பாதிப்பு!
மங்கோலியாவில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுவரை மொத்தம் 13,532 பேருக்கு தட்டம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரிகள் தெரிவித்ததாவது, பாதிக்கப்பட்டவர்களில் 13,514 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இருப்பினும், தற்போது 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாரிகள் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது, தட்டம்மை நோய் பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையும் குழந்தைகளையும் அதிகம் தாக்கக்கூடியது. உலகளவில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் 1,07,500-க்கும் மேற்பட்டோர் தட்டம்மை நோயால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
