நாளை தமிழகம் முழுவதும் 2000 இடங்களில் மருத்துவ முகாம்கள்... !!

 
முகாம்

தமிழகம்  முழுவதும் வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதே நேரத்தில் மழைக்கால நோய்களான சளி , இருமல், காய்ச்சலும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் நாளை  நவம்பர் 2ம் தேதி  சனிக்கிழமை 2000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் , அதில் 100 முகாம் பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

மருத்துவ முகாம்

இதுகுறித்து  அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  “வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மக்கள் நல்வாழ்வுத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 23.10.2023 தொடங்கி தற்போது வரை வாரம் தோறும் சனிக்கிழமைகளில் 1000 இடங்களில்  காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காய்ச்சல் பரவல் தற்போது அதிகரித்து இருப்பதால் நாளை   2000த்துக்கும்  மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. 

மெகா தடுப்பூசி முகாம்
அந்தவகையில் கடந்த 5 வாரங்களில் இதுவரை 10,576 முகாம்கள் நடைபெற்றன. அதில் 5,21,853 பேர் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர். மழைப்பொழிவு அதிகமாக உள்ள காரணத்தினால்  முதல்வர் ஸ்டாலினின் ஆணைக்கிணங்க அவர்களின் உத்தரவின்படி நாளை கூடுதல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.  அதன்படி  காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை இந்த முகாம்கள்  நடைபெறும். இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு  தங்களை பரிசோதித்து கொள்ள வேண்டும்.  மழைக்கால நோய்களிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ள இந்த பரிசோதனை அவசியம்  எனத் தெரிவித்துள்ளார்.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web