செமஸ்டர் தோல்வியால் மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை!
நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர், செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்த மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்த நிஷாந்த் (22) என்பவர் நாகை மாவட்டம் ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பில் பயின்று வந்தார். அவர் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படித்து வந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்ததால், நிஷாந்த் மனமுடைந்து இருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தனியாக அறைக்குள் சென்ற அவர், நேற்று காலை வரை வெளியே வராததால் சக மாணவர்கள் சந்தேகமடைந்தனர்.
அவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது, நிஷாந்த் மின்விசிறியில் கயிற்றால் தூக்கிட்ட நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
