மருத்துவ மாணவி படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்... உண்மை கண்டறியும் சோதனையில் சஞ்சய் ராய் கூறிய அதிர்ச்சி தகவல்கள்!
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் முதல் குற்றவாளியான சஞ்சய் ராய் உட்பட 4 பேரிடம் கடந்த சனிக்கிழமை உண்மை கண்டறியும் சோதனை (Polygraph Test) நடத்தப்பட்டது.
இந்நிலையில், உண்மை கண்டறியும் சோதனையில் சஞ்சய் ராய் சில அதிர்ச்சியளிக்கும் தகவல்களை கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் வழக்கின் விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் குறிப்பாக தான் கருத்தரங்கு அறைக்குச் சென்ற போதே மருத்துவ மாணவி உயிரிழந்த நிலையில் இருந்ததாக சஞ்சய் ராய் கூறியிருப்பது சர்ச்சையையும், வழக்கின் விசாரணைப் போக்கையும் திசைத்திருப்பியுள்ளது.
உண்மை கண்டறியும் சோதனையின் போது சஞ்சய் ராயிடம், பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்தது யார்? அவரை கொலை செய்தது யார்? உன்னுடைய இயர் போன் எப்போது உடைந்தது? பெண் மருத்துவரை இதற்கு முன்பு மானபங்கம் செய்தாயா? ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முதல்வர் சந்தீப் கோஷை உனக்கு முன்பே தெரியுமா? என சுமார் 20 கேள்விகள் சஞ்சய் ராயிடம் கேட்கப்பட்ட நிலையில், அவர் அளித்த பதில்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டன.
கருத்தரங்கு கூடத்தில் தான் நுழைந்த போதே மருத்துவர் கொலை செய்யப்பட்டு இருந்தார் என்ற அதிர்ச்சசி தகவலை சஞ்சய் ராய் சிபிஐ வசம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து அச்சத்தினால் அங்கிருந்து வெளியேறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்தில் சஞ்சய் ராயின் இயர் போன் இருந்தது. மேலும், அவர் கருத்தரங்கு கூடத்துக்குள் செல்லும் சிசிடிவி காட்சிகளும் அதனை உறுதி செய்தன. அதன் அடிப்படையில் அவரை மேற்கு வங்க போலீஸார் கைது செய்தனர். முதலில் இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட சஞ்சய் ராய், தற்போது ‘தான் நிரபராதி என்றும், தன்னை இந்த வழக்கில் குற்றவாளியாக்க சதி செய்துள்ளனர்’ என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!