மகளிர் தினத்தில் உறுப்பினர் சேர்க்கை... விஜய் கட்சியில் அதிரடி முடிவு!

 
தவெக

தமிழ் திரையுலகில் இளைய தளபதியாகவும்,  தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர்   நடிகர் விஜய். இவர் கடந்த சில படங்களில்  தனது அரசியல் வருகையை மறைமுகமாக வெளிப்படுத்தி வந்தார்.  தற்போது  வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார்.   பிப்ரவரி 2ஆம் தேதி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.  

திரைத்துறையில் தனக்கான தனிமுத்திரை பதித்த விஜய்யின்  அரசியல் பயணம் பல  அரசியல் கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தினாலும்  பொதுமக்கள்,  ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து விஜய் தனது அறிக்கை  மூலம்   அரசியலில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தார்.  

தமிழக வெற்றிக்கழகம்

அதில், 2026 சட்டமன்றத் தேர்தல் தான் தற்போதைய இலக்கு .  கையில் இருக்கும் படங்களை  முடித்து கொடுத்த பிறகு   முழுநேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.   இந்திய தேர்தல் ஆணையத்தில் தனது 'தவெக' என்ற புதிய கட்சியின்  ஒப்புதலுக்காக காத்திருக்கும் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜய், தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கிய பின், தவெக கட்சியின் கொடி, சின்னம்  குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

 தவெக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியை வலுப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி  கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து, பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளவும் நிர்வாகிகளுக்கு உத்தரவுகள் பறந்துள்ளன.  

விஜய் வெற்றிக் கழகம்

  உறுப்பினர் சேர்க்கை அடிப்படையில் மட்டுமே கட்சியில்  பொறுப்புகள் வழங்கப்படும். இதன் பிறகு தான்  கட்சி பொறுப்பாளர்கள் நியமனப் பணிகள் நடைபெறும் .  மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி உருவாக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலியும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.   இதனையடுத்து மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தில்   தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான  சிறப்பு செயலி அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் தவெக கட்சியின் உறுப்பினர்கள்  மாற்று கட்சிகளின் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது .  சிறப்பு செயலி அறிமுகமானதும், உறுப்பினர் சேர்க்கையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தமிழக வெற்றி தலைமை கழகம் அறிவுறுத்தியுள்ளது.  

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!