சென்னை மெட்ரோ- பறக்கும் ரயில் இணைப்பு!! பயணிகள் உற்சாகம்!!

 
மெட்ரோ பறக்கும் ரயில்

சென்னையில் விரைவில் மின்சார ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மெட்ரோ ரயில், பறக்கும் ரயில் சேவை இரண்டும் விரைவில் இணைக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இந்தப்பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கும் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

மெட்ரோ பறக்கும் ரயில்

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அடுத்தகட்ட பணிகள்  தொடங்கப்படும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு ரயில்வே வாரியத்திடம்  ஒப்படைத்துள்ளது  

மெட்ரோ பறக்கும் ரயில்

மந்தைவெளி, கீரின்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபாய் நகர், இந்திராநகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி  ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.  மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்களில் உள்ள 20,44,400 ச.மீ இடத்தில் உணவகங்கள், வாகன நிறுத்தம் என கூடுதல்  வசதிகளை ஏற்படுத்தவும்  திட்டமிடப்பட்டு வருகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web