மெட்ரோ ரயில் பார்க்கிங் மூடல்... வாகன ஓட்டிகள் கடும் அவதி...!!

 
மெட்ரோ பார்க்கிங்

தமிழகத்தில் வங்கக்கடலில் பகுதிகளில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெரினாவில் வழக்கத்தை காட்டிலும் அலைகள் ஆளுயரத்திற்கு எழுகின்றன. இதனையடுத்து மெரினா பீச் மூடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் கனமழை காரணமாக சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில்  மழைநீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து நாளை மறுநாள்  டிசம்பர் 5ம் தேதி காலை 10 மணி வரை பார்க்கிங் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ


இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  “ சென்னையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் பகுதியில் மழை நீர் அதிகமாக தேங்கியுள்ளது. இதனையடுத்து   வாகனம் நிறுத்துமிடம்  செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்துள்ளது.  மெட்ரோ ரயில் பயணிகள்  தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உடனடியாக எடுத்துக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

மெட்ரோ

இதனையடுத்து   வாகன உரிமையாளர்கள் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வாகனங்களை எடுத்து செல்லாத பட்சத்தில் வாகனங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மெட்ரோ ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்காது எனவும்  தெரிவித்துள்ளது.  இதற்கு மாற்று ஏற்பாடாக  ஆலந்தூர், நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என  மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web