2025ல் பூந்தமல்லி -போரூர் மெட்ரோ ரயில் தொடக்கம்... மக்கள் வரவேற்பு!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பல பகுதிகளில் மெட்ரோ ரயில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை நிறைவடையும் போது பொதுப்போக்குவரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போவதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். இப்போதே மெட்ரோ ரயில் இயங்கும் வழித்தடங்களில் பலர் தினசரி பயன்பாட்டுக்கும் மெட்ரோவை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில் 2024 நவம்பர் மாதம் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜூன் பேட்டியளித்துள்ளார்.கிண்டியில் இருந்து பூந்தமல்லி வரை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதனையடுத்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அடுத்த ஆண்டில் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் பகுதிகளை பார்வையிட்டார். பூந்தமல்லியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிமனை மற்றும் பணிகளை ஆய்வு செய்துவிட்டு சென்ற நிலையில் மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் “ஆளில்லாத ரயில் இயக்குவது எப்படி ரயில் வரும் நேரம் குறித்து விரிவான விளக்கங்களை அமைச்சர் உதயநிதி கேட்டறிந்து கொண்டார். மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்து 2 மாதங்கள் சோதனை ஓட்டம் நடத்தப்படும். 2025 ல் நவம்பர் மாதம் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும். மற்ற வழித்தடங்களிலும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. பூந்தமல்லி பணிமனையை பொறுத்தவரை 75 சதவீத மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்து விட்டது எனத் தெரிவித்துள்ளார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
