71வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதையடுத்து அந்த அணைகளுக்கு வரும் உபரி நீர் அனைத்தும் காவிரியில் திறந்து விடப்படுகிறது. குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரி நீராக 1.20 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு தமிழகத்தை வந்தடைந்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.
*71 முறையாக 100 அடியை எட்டியது மேட்டூர் அணை காவிரி அன்னைக்கு மலர் தூவி மரியாதை*
— AIR News Trichy (@airnews_trichy) July 27, 2024
மேட்டூர் அணை வரலாற்றில் 71-வது முறையாக அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி அன்னைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். pic.twitter.com/xm2CH28CTj
மேட்டூர் அணை 71வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 81,552 கன அடியில் இருந்து 93,828 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது.இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மத்திய நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
