மிக்ஜாங் புயல் ஆட்டம் ஆரம்பம்... வீட்டை விட்டு வெளியே வராதீங்க... வானிலை மையம் எச்சரிக்கை!

 
புயல்

மிக்ஜாங் புயல் ஆட்டம் ஆரம்பமாகின்றது. இதன் காரணமாக டிசம்பர் 4ம் தேதியும், டிசம்பர் 5ம் தேதியும் தேவையில்லாமல் சென்னை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இது குறித்து இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 440 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே 450 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தெற்கு- தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும், தெற்கு- தென்கிழக்கே 670 கிலோ மீட்டர் தொலைவிலும், மசூலிங்கப்பட்டணத்திற்கு தெற்கு- தென்கிழக்கே 670 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 4ம் தேதி முற்பகல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோர பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு கடலோர பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து வரும் 5ம் தேதி முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிங்கப்பட்டினத்துக்கு இடையே புயலாக கடக்கப்படும். இதன் காரணமாக நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 4ம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 5ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், "புயல் காரணமாக டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னை மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

 ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web