வெளிமாநில புலம்பெயர்ந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது – அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் தற்காலிகமாக தங்கி வேலை செய்யும் வெளிமாநிலத்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளை எதிர்த்து பல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. தமிழகத்தில் இந்த பணியை மாநில அரசு ஊழியர்கள் நேர்மையாகச் செய்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் மேலதிக உத்தரவுகளால் சிக்கல் உருவாகிறது.
இந்நிலையில், பீகார், ஜார்கண்ட், மேற்குவங்காளம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் வேலை செய்கிறார்கள். இவர்கள் சில மாதங்கள் வேலை பார்த்து பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்கின்றனர். இவர்களை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது பொருத்தமல்ல.

தமிழகத்தின் அரசியல் சூழல் இவர்களுக்கு தெளிவாகத் தெரியாது; தங்கள் மாநில அரசியல் மனநிலையை வைத்து வாக்களிப்பார்கள். எனவே, ஒரே இடத்தில் நிரந்தரமாக வசிக்க முடியாதவர்களை வாக்காளர்களாக பதிவு செய்யக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு,” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
