நவம்பர் 2ம் தேதி விண்ணில் பாயத் தயாராகும் ராணுவ செயற்கைக்கோள் ‘ஜிசாட்–7 ஆர்’!

 
ராக்கெட்

 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் நவம்பர் 2-ம் தேதி ‘ஜிசாட்–7 ஆர்’ எனப்படும் ராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. பாகுபலி என செல்லமாக அழைக்கப்படும் ‘எல்.வி.எம்–3’ ராக்கெட் மூலமாக 4,400 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

இஸ்ரோ

‘எல்.வி.எம்–3’ ராக்கெட் முழுமையாக ஒன்று சேர்க்கப்பட்டு, ‘ஜிசாட்–7 ஆர்’ செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. ஏவுதளத்துக்கு முந்தைய அனைத்து தயாரிப்புகளும் முடிவடைந்த நிலையில், கடந்த அக்டோபர் 26-ம் தேதி ராக்கெட் ஏவுதளத்துக்கு நகர்த்தப்பட்டது. இதன் மூலம் இறுதிக்கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இஸ்ரோ

இந்நிலையில், ஏவுதலுக்கான கவுண்ட்டவுன் வரும் நவம்பர் 1-ம் தேதி தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்தின் தகவல் தொடர்பு திறனை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஜிசாட்–7 ஆர்’ செயற்கைக்கோள், நாட்டின் பாதுகாப்பு துறையில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!