பேரதிர்ச்சி... கடலில் லட்சக்கணக்கில் செத்து கரை ஒதுங்கிய மீன்கள்...!!

 
மீன்கள்

வடக்கு ஜப்பானில்  ஹகோடேட் கடற்கரையில், டன் கணக்கில் மீன்கள்  கொத்து கொத்தாக செத்து கரை ஒதுங்கியுள்ளன. கடற்கரை முழுவதும்  திடீரென லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழந்து மிதக்கத் தொடங்கியுள்ளது.    இதனால் கடற்கரை முழுவதும் மீன்கள் மயமாக காட்சியளிக்கிறது.  இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் அதனை அள்ளி விற்பனை செய்ய தொடங்கிவிட்டனர்.

மீன்கள்

ஆனால் ஆய்வாளர்கள் தானாக உயிரிழந்த மீன்களை சாப்பிட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  திடீரென இவ்வளவு மீன்கள் இறந்ததற்கான காரணம் உடனடியாக கண்டறிய முடியவில்லை.  ஃபுகுஷிமா அணு அலையில் இருந்து கதிர்வீச்சு கலந்த தண்ணீர் கடலில் கலக்கப்பட்டதால் ஒரு வேளை இந்த சேதம் உருவாகியிருக்கலாம் என  சந்தேகம் எழுந்துள்ளது.

மீன்கள்

 இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற மீன் ஆராய்ச்சியாளர்கள் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்த ஆய்வு முடிவுகள்  வெளியான பிறகே, மீன்களின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.  அக்டோபர் மாதம் ஃபுகுஷிமா அணு அலையில் இருந்து கழிவுநீர் கடலில் கலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது உயிரிழந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web