செம... வெறும் ரூ100யில் ஆட்டோவில் மினி ஏசி ... பொதுமக்கள் உற்சாகம்.. !

 
ரத்தின வேல் பாண்டியன்

மதுரை பெத்தானியபுரம் பகுதியில்  இ.பி.காலனியில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவர் ரத்னவேல் பாண்டியன். டிப்ளமோ படித்திருக்கும் இவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டே ஆட்டோவும் ஓட்டி வருகிறார். இவருக்கு திருமணமாகி 18 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.  இவர் தன்னுடைய ஆட்டோவில் மினி ஏசி செட் செய்துள்ளார். இது பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  

ரத்தின வேல் பாண்டியன்

இது குறித்து ரத்தினவேல்பாண்டியன் ‘கோடை காலத்தில் ஆட்டோ ஓட்டுவதும் சிரமம். பயணம் செய்பவர்களுக்கும் சிரமம். காராக இருந்தால் ஏசி போடலாம். ஆட்டோவை பொறுத்தவரை  இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் சிம்பிளாக  வெறும் 100 ரூபாய் செலவில் பிளாஸ்டிக் பைப்புகள் கொண்டு மினி ஏசி  மாட்டியுள்ளார்.  இதன்மூலம் குளிர்ந்த காற்று ஆட்டோவினுள் வருகிற மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.  இது குறித்த விளக்கம் அளிக்கையில்  “3 இன்ச் பைப் மற்றும்  2  இன்ச் பைப்புகளை இணைத்துள்ளார். பின் 100 எம்.எல்.தண்ணீரை பைப்பின் அடியில் வைத்துள்ளார். ஆட்டோவில்  செல்லும்போது  3 இன்ச் பைப்பின் வழியே காற்று உள்ளே சென்று தண்ணீரில் பட்டு  2 இன்ச் குழாய் வழியே குளிர்ந்த காற்றுடன் வெளியே வருகிறது. இதனால் பயணிகள் வெயிலின்  தாக்கம் தெரியாமல் குளிர்ந்த காற்றுடன் பயணிக்க முடியும்” என்கிறார் ரத்னவேல் பாண்டியன்.

ரத்தின வேல் பாண்டியன்


இது குறித்து  “என் அப்பா ஈஸ்வரன் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து  ஓய்வு பெற்றவர். என் தம்பிகள் இருவரும் போலீஸ். இப்படி குடும்பத்தில் உள்ளவர்கள் காக்கி உடையில் மக்கள் சேவை செய்வதால் நானும் காக்கி உடையில் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சேவையை செய்து வருகிறேன்.  அதே நேரத்தில் யாருக்கும் இலவசமாக ஆட்டோ ஓட்டுவதே இல்லை. நியாயமான  ரேட்டுக்கு  ஓட்டுவேன் என்கிறார் ரத்னவேல் பாண்டியன்.  இவரின்   ஸ்மார்ட் ஏ.சி.க்கு பாராட்டுகள்  குவிந்து வருகின்றன.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web