ஆசிரியர் அவமதிப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.... அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசம்!

 
அன்பில் மகேஷ்

 தமிழகத்தின் தலைநகர் சென்னை அசோக் நகரில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வு சர்ச்சையாக மாறியுள்ளது. அந்த சொற்பொழிவில்  முன் ஜென்மம், மாற்றுத்திறனாளிகள் பற்றி ஆன்மீக சொற்பொழிவாளர் பேசிய சர்ச்சைக் கருத்துக்கள் தற்போது பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்து வருகின்றன.  
இது குறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியர் விளக்கமளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

அரசுப்பள்ளி சர்ச்சை


இச்சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அசோக் நகர் பள்ளிக்கு நேரில் வந்த அமைச்சர் அன்பில் மகேஷ்  ”தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் 3-4 நாட்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”. நாங்கள் எடுக்கும் நடவடிக்கை என்பது, ஒட்டுமொத்தமாக தமிழகத்தில்  இனி இதுபோல நடக்காத வண்ணம் இருக்கும். இன்று காலையிலேயே எல்லா பள்ளிகளுக்கும் இது குறித்து  சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பேச்சாளரால் தரைகுறைவாக பேசப்பட்ட ஆசிரியரை தற்போது நேரில் பார்க்க போகிறோம். உங்களுக்கு இருக்கும் அதே உணர்வு தான் தமிழ்நாடு முதலமைச்சருக்கும், பள்ளி கல்வித்துறைக்கும் இருக்கிறது. இனி இதுபோல ஒரு சம்பவம் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுக்கப்படும்.” என பேசியுள்ளார்.  இதன் பிறகு பள்ளிக்கு சென்ற அன்பில் மகேஷ்,   ” பள்ளியில் மாணவர்கள் பயப்படக்  கூடாது. யார் வந்தாலும்   யார் என விசாரிக்க வேண்டும்.  

முதல்வர் ஸ்டாலின்

பள்ளிக்கு வருபவர் யார், அவரது பின்னணி என்ன என்பதை விசாரித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆன்மிக சொற்பொழிவாளரை தட்டிக்கேட்ட ஆசிரியர் சங்கர் மேடையில் நம்முடன் இருக்கிறார். பள்ளிக்கு யார் வரவேண்டும்? யார் வரக்கூடாது என்பதில் பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய தெளிவு இருக்க வேண்டும். நிகழ்ச்சிகளுக்கு நிர்வாக ரீதியாக எப்படி அனுமதி பெறவேண்டும் என்ற குறைந்தபட்ச புரிதல் ஆசிரியர்களுக்கு வேண்டும். ”நான் கூறியதை எச்சரிக்கையாகவோ அல்லது அறிவுரையாகவோ ஆசிரியர்கள் எடுத்துக்கொள்ளுங்கள். தவறு யார் செய்தாலும் தப்பிக்க முடியாது. தவறு செய்தவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை உண்டு.
அறிவியல் சார்ந்த கல்வியை மாணவர்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் கொள்கை.  யாரை வேண்டுமானாலும் பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களை பேசவிட்டு கைதட்ட கூடாது.” என மாணவர்கள் மற்றும் ஆசிரியர் மத்தியில் அன்பில் மகேஷ் பேசினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web