அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் மகள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தல்! குவியும் வாழ்த்துகள்!

 
நிலா ராஜா பாலு

தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் மகள் நிலா ராஜா பாலு, இந்திய தலைநகர் டெல்லியில் நடைப்பெற்று வரும் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில், ஷாட் கன் ஜூனியர் பெண்களுக்கான பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.  கடந்த வருடம் நடைப்பெற்ற போட்டியிலும் நிலா ஜூனியர் மகளில்  பிரிவில் தங்கம் வென்று சாதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரு வருடங்களாக தங்கப்பதக்கம் வென்றவர் என்கிற முறையிலும், நிலா சாதனைப் படைத்துள்ளார். 


இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் (டிவிட்டர்) பதிவில், என் மகள் #NilaaRajaa பாலு 66வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தனிநபர் தங்கம் வென்றுள்ளார். கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்காக ஜூனியர் மகளிர் தேசிய தங்கத்தை வென்ற இளைய துப்பாக்கி சுடும் வீராங்கனையான இவர், இப்போது தனது மாநிலத்திற்காக தொடர்ந்து இரண்டு தங்கம் வென்ற இளையவர் ஆவார்.இது தமிழ்நாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Image

இந்நிலையில் அமைச்சரின் மகள் சாதனைக்கு அரசியல் சார்பிலும் விளையாட்டு துறை சார்பிலும் பாரட்டுகள் குவிந்து வருகின்றது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web