தளபதியின் மக்கள் பணி சிறக்கட்டும்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் விஜய்க்கு வாழ்த்து... !

 
உதயநிதி

தமிழகத்தில் இன்று விஜய் புதுக்கட்சி தொடங்கியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. அத்துடன் பல விமர்சனங்கள், கருத்துக்கணிப்புக்கள், இன்று கட்சி ஆரம்பித்ததன் பலன்கள் என சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வரத் தொடங்கி விட்டன. அந்த வகையில் தமிழகத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  இன்று  புதிய கட்சியை தொடங்கியுள்ள நடிகர்  விஜய்க்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  “ இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்க உரிமையுள்ளது. விஐய்யின் மக்கள் பணி சிறக்ககட்டும். புதிய கட்சியை தொடங்கியதற்கு எனது பாராட்டுகள் “ என  தெரிவித்துள்ளார்.  நடிகர் விஜய் ஏற்கனவே தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். சமீபகாலமாக  அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு” எனப் பதிலளித்துள்ளார்

இந்த நிகழ்வு தமிழக அரசியல் களத்திலும், ரசிகர்களிடையும் புது உற்சாகத்தையும்,  பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது சினிமா வாழ்க்கை குறித்தும் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  “என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன்.

விஜய்
என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்து விட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.  இதன் அடிப்படையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘The Goat' படத்தை முடித்துவிட்டு பின்பு முழுமையாக விஜய் அரசியல் பணிகளில் ஈடுபடலாம் எனத் தெரிகிறது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web