காணாமல் போன சிறுமி பாகிஸ்தான் எல்லை அருகே மீட்பு!
மத்தியபிரதேச மாநிலம் குனா மாவட்டம் மக்சோடங்கர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 8ம் தேதி இரவு வீட்டிலிருந்து திடீரென மாயமானார். மகள் காணாமல் போனதாக அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.

மாயமான குழந்தைகளை கண்டுபிடிக்கும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில ஆட்சி அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்தி வரும் ‘ஆபரேஷன் முஸ்கன்’ திட்டத்தின் கீழ் இந்த வழக்கும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. மத்தியபிரதேசம் மற்றும் பஞ்சாப் போலீசார் இணைந்து மேற்கொண்ட தொடர்பு நடவடிக்கைகளில், சிறுமி ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மார் மாவட்டத்தில், பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது.

இது குறித்த தகவல் உறுதி செய்யப்பட்டதும், மத்தியபிரதேச போலீசார் ஜெய்சல்மாருக்கு சென்று சிறுமியை மீட்டனர். பின்னர், உரிய சட்டநடவடிக்கைகள் முடிக்கப்பட்டதையடுத்து சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறுமி எவ்வாறு அங்கு சென்றார், யாருடன் சென்றார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
