ப்ளீஸ்... கடையை மூடுங்க ... எம்.எல்.ஏ. காலில் விழுந்து கதறிய இளம்பெண்!!

 
எம்.எல்.ஏ.காலில்

தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 12525 கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றினார். அதன் பிறகு நடத்தப்பட வேண்டிய திட்டங்கள், செயல்பாடுகள், குறைபாடுகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. அந்த வகையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்  இருந்த பெண் திடீரென  சோழவந்தான் தொகுதி (திமுக) எம்.எல்.ஏ., வெங்கடேசன் காலில் விழுந்தார்.

கிராம சபை கூட்டம்

இப்பகுதியில் உள்ள மதுக்கடையை மூட வேண்டும் என கோரிக்கை வைத்தார். உடனடியாக அந்த பெண் மற்றும் கிராம மக்களிடம் பேசிய எம்.எல்.ஏ., இது குறித்து   கலெக்டரின் கூறி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.   . கிராமசபை கூட்டத்தின் போது திடீரென வந்த பெண் ஒருவர் எம்.எல்.ஏவின் காலில் விழுந்து தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடையை மூட வேண்டும் என கோரிக்கை வைத்தது அப்பகுதி பெண்களிடையே பெரும் பேசுபொருளாகியது.  

எம்.எல்.ஏ.காலில்

முன்பெல்லாம்  கூட்டத்தில் அரசியல்வாதிகளிடம் பேச தயங்குவர். சமீபத்தில் முதல்வர் காஞ்சிபுரம் சென்றிருந்த போது அங்கிருந்த பெண் தொழிலாளர்கள் தங்களுக்கு மாதம் ரூ1000 வழங்கப்படவில்லை என நேரடியாக கூறினர். முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. அதே போல் கிராம சபை கூட்டத்தில்  கிராம மக்கள்சார்பில் பெண் ஒருவர் எம்.எல்.ஏ. விடம் நேரடியாக குறைகளை முறையிட்டு உடனடியாக செய்ய வலியுறுத்தியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web