சிக்கமகளூரில் எம்.எல்.ஏ. உதவியாளர் ஆபாச வீடியோ மிரட்டல் ...போலீசார் கைது!
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. நயனா மோட்டம்மா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவரின் உதவியாளராக பணியாற்றி வந்தவர் ஆதித்யா. அவர், சிக்கமகளூரில் ஆதிசக்தி நகரில் வசித்து வரும் ஒரு பெண்ணை குறிவைத்து அவளது ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் அனுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மனஉளைச்சலுக்குள்ளான அந்த பெண் சிக்கமகளூரு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆதித்யாவை கைது செய்தனர். தற்போது அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
