இன்று முதல் மொபைல், கேமிரா கொண்டு செல்லத் தடை... அதிரடி உத்தரவு!!

 
சுவாமிமலை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ளது சுவாமிமலை  சுவாமிநாதசுவாமி திருக்கோவில்.  முருகனின் 4ம் படைவீடான சுவாமிமலைதான் தகப்பனுக்கே பாடம் சொன்ன இடம். இதனால் நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தகப்பன்சாமியான முருகப்பெருமானை காண வரும் பக்தர்கள் பெரும்பாலும் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே திருக்கோவிலுக்குள் நுழைகின்றனர்.   மலைக்கோவிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி சன்னிதிகள் அமையப் பெற்றுள்ளன. சுவாமிநாதனைக் காண 60  தமிழ் வருடங்களை நினைவூட்டும் வகையில் 60 படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். 

செல்போன் தடை

இத்திருக்கோவில் இந்துஅறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இன்று செப்டம்பர் 25ம் தேதி திங்கட்கிழமை முதல் இத்திருக்கோவிலில் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இன்று திங்கட்கிழமை முதல் செல்போன்கள், புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை  கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுவாமிமலை

இதனை கொண்டு வருபவர்கள் தங்களது கைபேசி , கேமிராக்களை கோயில் தெற்கு கோபுர வாசலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் கட்டணம் செலுத்தி ஒப்படைத்து செல்லுமாறுக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனை மீண்டும் பத்திரமாக பெற்று செல்லவும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web