அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

 
மழை

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சூறாவளிக்காற்றும், வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.வெப்பச்சலனம் காரணமாக  இன்று முதல் ஜூன் 10ம் தேதி வரை 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

மழை

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருவள்ளூர், மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில்   தென்கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

கன மழை

வங்கதேசம் வழங்கியுள்ள 'பிபோர்ஜோய்' என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருள் .  இந்த புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும்,   இந்த புயலால் கேரளா முதல் மகாராஷ்டிரா மாநிலம் வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் எனவும்  வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web