குடையுடன் கிளம்புங்க... அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழை!

 
மழை

 தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தொடர்மழை பல பகுதிகளில் பெய்து வருகிறது. அந்தவகையில் தற்போது வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது.

மழை

இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக இன்று சென்னை உட்பட 10 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி திருவள்ளூர், திருப்பூர், தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web