6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சில பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தகவல் வெளியிட்டுள்ளது.

அதில், கன்னியாகுமரி, தென்காசி, கோவை மாவட்டங்களின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நெல்லை, தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களின் சில இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த சில மணி நேரங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதால், மலைப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
