தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு!

 
school rain
 

மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், கிழக்கு–வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்து அதே பகுதிகளில் நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் கிழக்கு–வடகிழக்கு திசையில் நகர்ந்து, தெற்கு குஜராத் மற்றும் வடக்கு மராட்டிய கடலோரங்களை நோக்கி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை

அதே நேரத்தில், தெற்கு மியான்மர் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால், அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி! மேலும் 2 தினங்களுக்கு தொடரும் மழை!

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!