7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 
பனி, மழை
 

தமிழகத்தில் புதன்கிழமை (நவம்பர் 5) ஏழு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மியான்மார் கடலோரப் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெற்றுள்ளது.

மிக கன மழை!! இந்த 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீடிக்கிறது!!

இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு–வடமேற்கு திசையில் நகரும் என்றும், மியான்மார்–வங்கதேச கடற்கரையை ஒட்டி நகரும் வாய்ப்பும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இதன் விளைவாக, புதன்கிழமை வட தமிழகத்தின் சில இடங்களிலும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

விடுமுறை பள்ளி இன்று மழை கனமழை

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்யலாம். மேலும், நவம்பர் 6 அன்று பல மாவட்டங்களில் தொடர்ந்தும் மழை வாய்ப்பு நீடிக்கும் என்றும், நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் மாநிலம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!