ஷொட்டு... இஸ்ரேலுக்கு குரல் கொடுக்கும் மோடி மணிப்பூருக்கு மௌனம் காப்பது வெட்கம்!!

 
மணிப்பூர்

மணிப்பூரில் மே மாதம் இரு சமூகத்தினரிடயே ஏற்பட்ட மோதல் காரணமாக பெரும் கலவரம் வெடித்துள்ளது. இதில் பெண்கள் , குழந்தைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.   அதே போல் தற்போது தொடங்கியிருக்கும் இஸ்ரேல் பாலஸ்தீனப் போரில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. பிரதமர் மோடி இது குறித்து கண்டனக்குரல் எழுப்பியுள்ளார்.  இது குறித்து காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதில்  இஸ்ரேலில் நடக்கும் படுகொலைகளுக்கு எதிராக விரைந்து குரல் கொடுக்கும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள், மணிப்பூர் படுகொலைகளில் நீண்ட நாள் மௌனம் காப்பது ஏன்? இது வெட்கக்கேடானது’ என பாஜகவுக்கு எதிரான  தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.  

மோடி


சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை  சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார்  தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் இணைந்து, மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா(ஷிண்டே) - பாஜக கூட்டணி அரசில் ஐக்கியமாகி இருக்கிறார்.  துணை முதல்வராகி இருக்கும் அஜித் பவார், சரத் பவாரையும் பாஜகவுக்கு வந்துவிடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.  தற்போது இஸ்ரேல் விவகாரத்தை முன்வைத்து, பாஜக மீது கடுமையாக தாக்கியுள்ளார்.  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான கிளைட் கிரஸ்டோ. “உலகின் எந்த மூலையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டாலும் அதற்கு எதிராக குரல் கொடுத்தே ஆக வேண்டும். சற்றும் தயங்காது அவற்றை கண்டித்தே ஆக வேண்டும். இஸ்ரேலில் அப்பாவி மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலும் கடும் கண்டனத்துக்கு உரியது.

மோடி

இஸ்ரேல் உட்பட உலகின் எந்த மூலையில் படுகொலை நிகழ்ந்தாலும் அவை கடும் கண்டனத்துக்கு உரியவை என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.இஸ்ரேல் படுகொலைக்கு விரைந்து கண்டனம் தெரிவிக்கும் பிரதமர் மோடி உட்பட  பாஜக தலைவர்கள், மணிப்பூர் படுகொலைகளில் தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்? மணிப்பூர் இதே உலகில் குறிப்பாக நீங்கள் ஆளும் இந்தியாவில் இருக்கிறது என்பதை நினைவூட்டிக் கொள்கிறோம். உலகின் பல்வேறு மூலைகளில் நடக்கும் பிரச்சினைகளில் விரைந்து கருத்தும், கண்டனமும் தெரிவிக்கும் மோடி  , சொந்த மக்களின் துயரத்தை கண்டும் காணாது போல் இருப்பதும், அது குறித்து வாய் திறக்காது மௌனித்து இருப்பதும் வெட்கக்கேடானது” என்கிறார் கிளைட் கிரஸ்டோ.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web