கண்ணா கை வலிக்கும்... கையை அசைத்த சிறுவனிடம் கனிவாக பேசும் மோடி... நெகிழ்ச்சி வீடியோ!
இந்தியாவில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம், கூட்டணி கட்சிகள் என மும்மூரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது வழக்கம் போல் மோடி மேடையில் நின்று பேசிக் கொண்டிருந்த போது சிறுவன் ஒருவன் மோடியை நோக்கி கையசைத்தான்
देखिए प्रधानमंत्री श्री @narendramodi जी का बच्चे के प्रति स्नेह भाव...#TribalsWithModi pic.twitter.com/SdfLhnzDmg
— BJP Madhya Pradesh (@BJP4MP) February 11, 2024
. அதனை கவனித்த மோடி உன்னுடைய அன்பை ஏற்றுக்கொள்கிறேன். கையை அசைப்பதை நிறுத்திவிடு. இல்லையெனில் கை வலிக்கப் போகிறது எனக் கூறினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் சின்னஞ்சிறுவயது சிறுவன் ஒருவர் தனது தந்தையின் தோளில் மீது அமர்ந்திருந்தார். தோள் மீதிருந்து மோடிக்கு கையை அசைத்து அன்பை வெளிப்படுத்தினார். இதற்கு பதிலுக்கு மோடியும் கையை அசைத்து அவரது கையசைப்பை ஏற்றுக்கொண்டார். ஆனால் அந்த சிறுவன் கை அசைப்பதை நிறுத்தவே இல்லை. மோடி அந்த சிறுவனிடம் , "உனது அன்பை ஏற்றுக் கொள்கிறேன். கை அசைப்பதை தயவு செய்து நிறுத்தி சாதரணமாக வைத்து கொள். இல்லாவிட்டால் கை வலிக்க போகிறது" என மோடி பேச கூட்டத்தில் இருந்தவர்கள் பலமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் ரூ. 7, 550 கோடி மதிப்பிலான நலத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய போது ஆற்றிய உரையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி இந்தியா முழுவதும் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். பாஜக மட்டும் 370 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் 3 வது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலே இதற்கு சான்று. என்றென்றும் நான் மக்களின் ஊழியனாக அவர்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன் எனக் கூறினார்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க