மோடி சிறப்பு பாதுகாப்பு படை இயக்குநர் காலமானார்!!

 
மோடி

பிரதமர் மோடியின்   சிறப்பு பாதுகாப்புப் படையின் இயக்குநர் அருண் குமார் சின்ஹா. இவருக்கு வயது 61. இவர்   கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  சிகிச்சை பலனின்றி காலமானார். 1987 பேட்ச் கேரளா கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர்  அருண் குமார் சின்ஹா. இவர்  2016ல்  மார்ச் மாதம் சிறப்பு பாதுகாப்புப் படையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

அருண்குமார் சின்ஹா


அவருக்கு  மே  31ம் தேதி ஓராண்டு காலம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  அருண் குமார் சின்ஹா இதற்கு முன்பு திருவனந்தபுரத்தில் டிஜிபி, ரேஞ்ச் ஐஜி, உளவுத்துறை ஐஜி மற்றும் நிர்வாக ஐஜியாக பணிபுரிந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மோடி
இந்தியாவில் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு  இசட் பிளஸ், இசட், ஒய் மற்றும் எக்ஸ் பிரிவுகளில் விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மிக, மிக முக்கிய பிரமுகர்களின் உயிருக்கு அச்சுறுத்தலின் அடிப்படையில் அவர்களுக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர், முன்னாள் பிரதமர், அவர்களது நேரடி குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு பாதுகாப்புப் படை   பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது   இதில் திருத்தம் செய்யப்பட்டு, பதவியில் உள்ள பிரதமர்களுக்கு மட்டுமே இந்த  சிறப்பு பாதுகாப்புப் படையின்  பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web