வீடியோ... மோடி பள்ளிக் குழந்தைகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம்!!

 
மோடி

இன்று உலகம் முழுவதும் ரக்க்ஷா பந்தன் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சகோதரிகள், சகோதரர்களுக்கு கைகளில் ராக்கி கயிறை கட்டி விடுவர். தலைவர்கள், பிரபலங்கள் பலரும் நாட்டு மக்களுக்கு ரக்‌ஷாபந்தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  இந்நாளில், பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக நினைப்பவர்களுக்கு கைகளில்  ராக்கி கட்டி அன்பினை வெளிப்படுத்தி வாழ்த்துக்களையும் பரிசுகளையும் பெற்று வருகின்றனர்.  


அந்த வகையில் பிரதமர் மோடி டெல்லியில் பள்ளிக் குழந்தைகளுடன் ரக்க்ஷா பந்தன் கொண்டாடினார். பள்ளி குழந்தைகள் அவருக்கு ராக்கி கட்டி மகிழ்ந்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரக்‌ஷா பந்தன்

முன்னதாக ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.  ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ரக்க்ஷா பந்தன். இந்த நாளில் பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாக கருதுவோரின் மணிக்கட்டில் அன்பின் அடையாளமாக ராக்கி கயிறு கட்டி வாழ்த்து பெறுவர்.   ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு பரிசு அளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web