சொல்லாத சோகங்கள் தீர்க்கும் சோமவார வழிபாடு!!

 
பிரதோஷம்

திங்கட்கிழமை சோமவாரம் சிவபெருமானுக்கு உகந்த நாள். இந்த கிழமையில் விரதமிருந்து சிவபார்வதியை தம்பதி சமேதராக வழிபட்டு வந்தால் கணவன் மனைவி அன்னியோன்யம் அதிகரிக்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. இந்த சோமவார விரதத்தை மேற்கொள்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த திங்கட் கிழமையிலும் துவங்கலாம். திங்கட்கிழமை அன்று அதிகாலையில் நீராடி மாலை வரை உபவாசம் இருந்து சிவபார்வதி பூஜைகள் மேற்கொள்ள வேண்டும்.

ஸ்ரீரங்கம் தேர் பூஜை திருச்சி

கணவன் மனைவி இருவரும்  ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் சூழ்நிலைகளை இந்த விரதம் மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் உருவாக்கித் தருவார்.   அன்றைய நாளில் சிவபெருமான் பார்வதி தேவியுடன் இணைந்த படத்திற்கு வில்வ அர்ச்சனை செய்யலாம் . அத்துடன்  சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு உரிய மந்திரங்களையும் ஜபிக்கலாம். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரம்,  பழச்சாறுகள், பால், பழம் போன்றவற்றை உட்கொண்டு விரதம் மேற்கொள்ளலாம். வில்வம் கிடைக்காதவர்கள் தோஷம் போக்கும் செவ்வரளி மலர்கள், சங்கு பூக்கள் , சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய உகந்த மலர்கள் எதுவாயினும் அர்ச்சனை செய்ய பயன்படுத்தலாம். நைவேத்தியமாக பழங்கள்,  பாயாசம், சர்க்கரைப் பொங்கல் இவைகளில் ஏதாவது ஒன்றை படைக்கலாம்.  

சிவன் முருகன்

மாலை சிவன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வரலாம்.அதுவரை உடல் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் மனதிற்குள்  சிவ ஸ்லோகம் மனதிற்குள் உச்சரித்து வரவேண்டும். மாலையில் விளக்கேற்றி தூப, தீப ஆரத்தி காண்பித்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொண்டு சிவ பார்வதியை வணங்கினால் நிச்சயம் பிரார்த்தனைகள் பலிக்கும்.  இந்த விரதத்தை தொடங்கியதில் இருந்து வீட்டில் தம்பதியருக்குள் நல்ல   அன்னியோன்யம் உருவாவதை கண்கூடாக காணலாம்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web