தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை ... 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சென்னையும் சுற்றிய மாவட்டங்களும், டெல்டா மாவட்டங்களும் கனமழைக்கு உள்ளாகியுள்ளது. இதனை முன்னிட்டு, முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில், மழை நிலவரம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்கள் விவரங்களை சமர்ப்பித்தனர்.
இந்நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு / சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து, அவர்கள் உடனடியாக மாவட்டங்களில் சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட 12 மாவட்ட கண்காணிப்பு அதிகாரர்களின் பெயர் மற்றும் பதவி விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன. திருவள்ளூர் முதல் பெரம்பலூர் வரை நியமிக்கப்பட்ட அதிகாரிகள், தங்களது மாவட்டங்களில் முன்னெச்சரிப்பு நடவடிக்கைகளை உடனடியாக தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையிலும் 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தங்களது மண்டலங்களில் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர்.

அவர்களின் பெயர் மற்றும் மாவட்டம் பற்றிய விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிவிப்பில், 1. திருவள்ளுர் மரு.கே.பி. கார்த்திகேயன், இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், எல்காட் நிறுவனம், சென்னை 2. காஞ்சிபுரம் கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், தாட்கோ, சென்னை 3. செங்கல்பட்டு கிரந்தி குமார் பாடி, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், சென்னை 4. விழுப்புரம் எஸ்.ஏ. ராமன், இ.ஆப., இயக்குநர், தொழிலாளர் நலன், சென்னை 5. கடலூர் டி. மோகன், இ.ஆ.ப., இயக்குநர், சுரங்கம் மற்றும் கனிமவளம், சென்னை 6. மயிலாடுதுறை கவிதா ராமு, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், கோ ஆப்டெக்ஸ், சென்னை 7. திருவாரூர் டி. ஆனந்த், இ.ஆ.ப., ஆணையர், ஆதிதிராவிடர் நலம், சென்னை 8. நாகப்பட்டினம் ஏ. அண்ணாதுரை, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சென்னை 9. தஞ்சாவூர் எச். கிருஷ்ணனுன்னி, இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம், சென்னை 10. கள்ளக்குறிச்சி பி. ஸ்ரீ வெங்கடபிரியா, இ.ஆ.ப., செயலாளர், மாநில தேர்தல் ஆணையம், சென்னை. 11. அரியலூர் எம். விஜயலட்சுமி, இ.ஆப., ஆணையர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி, சென்னை 12. பெரம்பலூர் எம். லட்சுமி, இ.ஆ.ப., ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நலம், சென்னை என 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் விரைந்து செல்லும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில், 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சி பணி மண்டல அதிகாரிகள் தத்தமது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை உடனடியாக தொடங்கும்படியும் அறிவுறுத்தி உள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
