மீண்டும் விபத்தில் சிக்கிய மோனோ ரயில்... பயணிகள் அதிர்ச்சி!
மும்பை மோனோ ரயில், நடுவழியில் மீண்டும் விபத்தில் சிக்கியது பயணிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மும்பையில் தனித்துவமான ஒரே தண்டவாளத்தில் இயக்கப்படும் மோனோ ரயில் திட்டம் மீண்டும் விபத்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக கடந்த செப்டம்பர் 20ம் தேதி முதல் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், இன்று காலை நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தின் போது திடீரென விபத்திற்குள்ளானது.
வடலா டெப்போ அருகே தண்டவாளம் கிராசிங் பகுதிக்கு வந்தபோது, ரயில் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு பாதையில் மோதி நின்றது. இதனால் ரயில் பெட்டியின் அடிப்பகுதி கடுமையாக சேதமடைந்தது.

இது சோதனை ஓட்டம் மோதலின் போது ரயிலில் பயணிகள் எவரும் இல்லாதது பெரும் விபத்தை தவிர்த்தது. எனினும், ரயிலில் இருந்த இரண்டு ஓட்டுநர்களில் ஒருவர் தலையில் காயமடைந்ததாக தகவல். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் ‘சிறிய விபத்து’ என நிர்வாகம் கூறினாலும், தொடர்ச்சியான தொழில்நுட்ப கோளாறுகள் பயணிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், செப்டம்பர் 15 மற்றும் 19 தேதிகளில் மோனோ ரயில் மின்சார கோளாறு காரணமாக பாதையில் நின்று பயணிகள் கண்ணாடிகளை உடைத்து மீட்கப்பட்ட சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதன் பின்னரே சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மோனோ ரயில் திட்டம் மும்பையைத் தவிர இந்தியாவின் பிற பெரிய நகரங்களில் நடைமுறைப்படுத்தப்படாததற்கான காரணங்களை மீண்டும் கேள்விக்குள் கொண்டு வந்துள்ளது. தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் குறித்து மேலும் தீவிரமாக மறுஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வலுத்து வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
