நாளை தமிழகம் முழுவதும் 3000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்...!!

 
மருத்துவ முகாம்

 தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மிக மிக கனமழை வெளுத்துவாங்கியது.  படிப்படியாக நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநில அரசு  தேசிய பேரிடர் மீட்பு குழு தன்னார்வலர்கள், பிரபலங்கள் என போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள்  நடைபெற்று வருகின்றன. பல பகுதிகளில் மழை நீர் தேங்கிஉள்ளன. மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக தொற்றுநோய்கள் உருவாகும் அபாயம் உருவாகியுள்ளது. இதனையடுத்து தமிழகம் நாடு முழுவதும் நாளை 3000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வு துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

மருத்துவ முகாம்

இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகம்  முழுவதும் நாளை 3000 மருத்துவ மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.  குறிப்பாக  மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்  மாவட்டங்களில் 1000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பிருந்தே   அக்டோபர் 23 முதல்  தற்போது வரை ஒவ்வொரு வாரமும்  சனிக்கிழமைகளில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.  அதன்படி  2000க்கும்  மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.  அந்தவகையில் கடந்த 6 வாரங்களில் இதுவரை 13,234 முகாம்கள் நடைபெற்று அதில் 6,50,585 பேர் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர்.

மருத்துவ முகாம்


தற்போது பருவமழை தொடர்வதால் முதல்வரின் ஆணைக்கிணங்க  மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நாளை   3000 இடங்களில்  நடத்தப்படும்.  அதில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர்  மாவட்டங்களில் 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படும்.  சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோதாமேடு பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை  தொடங்கி வைக்கப்படும்.  பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு  பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் மழைக்கால நோய்களிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ள முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web