மாதம் ரூ1000 உரிமை தொகை .. இன்று இறுதி ஆலோசனைக்கூட்டம்!!
தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாளில் அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதிட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தில் இதுவரை 1.63 கோடி பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான இறுதி கட்ட ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
இதனை மகளிருக்கு சரியான வகையில் சென்று சேர்வதை உறுதி செய்ய பல்வேறு பரிசீலணைகள் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கலைஞர் உரிமைத் தொகை பெறும் இல்லத்தரசிகளுக்கு தனி ஏடிஎம் ருபே கார்டுகளை ரேஷன் கடைகள் மூலம் வழங்க திட்டமிட்டுள்ளது தமிழக அரசு. இந்த முடிவு குடும்பத்தலைவிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
விண்ணப்பித்த பெண்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் குடும்பத் தலைவிகளின்வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு இல்லாத பயனாளிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
குடும்பத் தலைவிகளுக்கு ஏடிஎம் கார்டு வழங்கப்படஉள்ளது. அதனை ரூபே கார்டாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கார்டு மூலம் உரிமைத் தொகை பணத்தை குடும்பத் தலைவிகள் எடுத்துக் கொள்ள முடியும். ஏடிஎம் கார்டுகளை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!