மாத சம்பளம் ரூ.35,400 வரை... ரயில்வேயில் 2,569 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
ரயில்வே

இந்திய ரயில்வேயின் பணியாளர் தேர்வாணையமான Railway Recruitment Board (RRB) சார்பில், நாட்டின் பல்வேறு மண்டலங்களில் உள்ள பிரிவுகளுக்கான 2,569 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி Junior Engineer, Depot Material Superintendent மற்றும் Chemical & Metallurgical Assistant போன்ற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

பதவிகள் மற்றும் தகுதிகள்:

Junior Engineer - டிப்ளமோ தகுதி பெற்றிருக்க வேண்டும்.
Depot Material Superintendent - டிப்ளமோ தகுதி அவசியம்.
Chemical & Metallurgical Assistant - அறிவியல் (B.Sc) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனைத்துப் பதவிகளுக்கும் மாதம் ரூ.35,400/- ஊதியம் வழங்கப்படும்.

ரயில்வே துறை வேலை வாய்ப்பு ரயில்

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒதுக்கீட்டு பிரிவினருக்கு மத்திய அரசின் விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும் —
SC/STக்கு 5 ஆண்டுகள், OBCக்கு 3 ஆண்டுகள், PwBD (Gen/EWS)க்கு 10 ஆண்டுகள், PwBD (SC/ST)க்கு 15 ஆண்டுகள், PwBD (OBC)க்கு 13 ஆண்டுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: 

SC, ST, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், மாற்றுப்பாலினத்தினர், சிறுபான்மையினர், பொருளாதார ரீதியாக பின்தங்கியோர் ஆகியோருக்கு ரூ.250 (தேர்வில் பங்கேற்ற பின் முழுதும் திருப்பி வழங்கப்படும்). பிற விண்ணப்பதாரர்கள் ரூ.500 (தேர்வில் பங்கேற்ற பின் ரூ.400 திருப்பி வழங்கப்படும்).

ரயில் தண்டவாளம் ரயில்வே பராமரிப்பு

தேர்வு முறை:

1. முதற்கட்ட கணினி தேர்வு (CBT Stage 1)
2. இரண்டாம் கட்ட கணினி தேர்வு (CBT Stage 2)
3. Typing Skill Test அல்லது CBAT (தேவைக்கேற்ப)
4. ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை

முக்கிய தேதிகள்:

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி - 31.10.2025
விண்ணப்பிக்க கடைசி நாள் - 30.11.2025

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.rrbapply.gov.in மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு, மத்திய அரசு பணிக்கு எதிர்பார்த்து வரும் தொழில்நுட்ப துறையினருக்கு சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?