உலகளவில் 100 கோடி குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்... ஆய்வறிக்கையில் தகவல்!

 
உடல் பருமன்

இது கொஞ்சம் அதிர்ச்சியான ஆய்வு அறிக்கை தான். வளரும்  பிள்ளைகள் தான் நம் உலகம் என்று பெற்றோர் அதீத பாசத்தை ஊட்டி வளர்க்கும் தலைமுறையில் வாழ்கிறோம். அதே சமயம், அவர்களுக்கு எது சரி? எது தவறு என்று பெரும்பாலும் நாம் சொல்லிக் கொடுப்பதில்லை?

ஏன்?... நமக்கே பெரும்பாலும் எது சரி? எது தவறு? என்பது தெரிந்திருக்கவில்லை. வார இறுதி விடுமுறை நாட்களில் வீட்டில் சமைப்பதில்லை என்று தமிழகத்தில் மட்டுமல்ல...  பெரும்பாலான நாடுகளில் எழுதப்படாத விதியாகவே இருந்து வருகிறது. அதன் நீட்சி தான், தெருவுக்கு 10, 15 பாஸ்ட் புட் கடைகளும், உணவகங்களும் வியாபித்திருக்கின்றன. யூ-ட்யூப்களில் ஆமைக்கறி சமைக்கிறேன்.. முயல் கறியை ப்ரை பண்றேன்.. தயிரில் ரசத்தை ஊற்றி அதன் மேலே ஒரு ஆம்லெட் போட்டு என்கிற ரீதியில் உணவு பழக்கங்கள் குறித்த வீடியோக்கள் இறைந்து கிடக்கின்றன. ஆனால், இவையெல்லாம் நம் வயிற்றைப் பதம் பார்க்கின்றன என நமக்குத் தெரிவதில்லை.

கடந்த 32 ஆண்டுகளில் உலகளவில் 5 வயதுக்குட்பட்ட மற்றும் வளரும் குழந்தைகளிடையே உடல் பருமன் பாதிப்பு நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. உலகளவில் 190 நாடுகளில் உள்ள 20 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளிடம் இந்த ஆய்வை லான்செட் மருத்துவக் குழு ஆய்வு மையம் நடத்தியது.

லான்செட் மருத்துவ ஆய்வின்படி, உலகளவில் 100 மில்லியன் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 2022 இல் 5 வயதுக்குட்பட்ட 15 மில்லியன் குழந்தைகள் மற்றும் 80 மில்லியனுக்கும் அதிகமான இளம் பருவத்தினர் உடல் பருமனாக இருப்பார்கள்.

உலகளவில், 190 நாடுகள் உடல் பருமன் ஆய்வில் சேர்க்கப்பட்டன. இதில், 22 கோடி பேரின் எடை, உயரம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. 5 முதல் 19 வயதுக்குட்பட்ட 6.3 மில்லியன் குழந்தைகளும், 20 வயதுக்கு மேற்பட்ட 15.8 மில்லியன் மக்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

1990 மற்றும் 2022 க்கு இடையில், குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் உடல் பருமன் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதில் பெண்களின் உடல் பருமன் 9 சதவீதத்தில் இருந்து 18.5 சதவீதமாக இரட்டிப்பாகியுள்ளது. பருமனான ஆண்களின் எண்ணிக்கை 4.8 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், குழந்தைகளின் உடல் பருமன் இருமடங்காக அதிகரித்துள்ளது.

உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மூட்டுவலி ஆகியவை அடங்கும். உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும் உடல் பருமனை குறைக்க உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிக்கை எச்சரித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web