தொடர் மழையால் 1000க்கும் மேற்பட்ட பாம்புகள் மீட்பு .... தீயணைப்பு துறை தகவல்!

 
மழை

வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற குடியிருப்புப் பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். கடந்த அக்டோபர் 16 முதல் 27 வரை 11 நாட்களில் மட்டும் பாம்பு பிடிப்பதற்காக 601 அவசர அழைப்புகள் வந்துள்ளன என துறை தெரிவித்துள்ளது.

இதில் சென்னையில் இருந்து மட்டும் 424 அழைப்புகள் வந்துள்ளன. அந்த அழைப்புகளில் 61 பாம்புகள் விஷமுடையவை என்றும், 363 பாம்புகள் விஷமற்றவை என்றும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் செங்கல்பட்டில் 73, திருவள்ளூரில் 62, காஞ்சிபுரத்தில் 41 அழைப்புகள் வந்துள்ளன. இவற்றில் பிடிக்கப்பட்ட 103 பாம்புகள் விஷமுடையவை, 498 பாம்புகள் விஷமற்றவை.

மேடவாக்கம், தாம்பரம், பள்ளிக்கரனை, பெரும்பாக்கம், வேளச்சேரி போன்ற தென் சென்னை பகுதிகளில் அதிகபட்ச அழைப்புகள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வீடுகள், திறந்த வெளி திடல்கள், குடியிருப்பு வளாகங்கள் போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்புகள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. கட்டு விரியான், நாகப் பாம்பு, தண்ணீர் பாம்பு போன்றவையும் மீட்கப்பட்ட பாம்புகளில் அடங்கும் என தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!