20க்கும் மேற்பட்ட போலீசார் இடமாற்றம்... லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது... கன்னியாகுமரியில் அதிரடி காட்டிய எஸ்.பி.,

 
கன்னியாகுமரி குமரி கடற்கரை கடற்சீற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டது எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் அவர்கள் அதிரடி  நடவடிக்கை எடுத்துள்ளது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

குறிப்பாக தக்கலை, குளச்சல், இரணியல் ஆகிய காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மற்றும் 8 உதவி காவல் ஆய்வாளர்கள் வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . மேலும் தக்கலை, குளச்சல், நேசமணி நகர், அஞ்சுகிராமம், ஆசாரிபள்ளம் உட்பட 12 காவல் நிலைய தனிப்பிரிவு போலீசார் தனிப்பிரிவிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நேசமணி நகர் காவல் நிலைய காவலர் சதீஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

லஞ்சம்

இந்த அதிரடி நடவடிக்கை குமரி மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் லஞ்சம் வாங்கும் போலீசாரை இனம் கண்டு அவர்களை களை எடுக்கும் பணி தொடரும் என்பதோடு அவர்கள் மீது பணியிடை நீக்கம் உட்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளது போலீசாரின் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு முழுவதும் தடை விதிப்பதாகவே  உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

மகிழ்ச்சி! அரசு அலுவலகங்களில் லஞ்சம் தர தேவையில்லை!

மேலும் நேர்மையாக பணியாற்றும் போலீசார் மட்டுமே குமரி மாவட்டத்தில் தனக்கு கீழ் பணியாற்ற முடியும் என்ற நிலையை உருவாக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கைக்கு ஊக்கமளிப்பதாகவே உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?