இன்று முதல் அரசு பேருந்துகளில் அதிரடி மாற்றம்... உடனடியாக நடைமுறைக்கு வந்தது!

 
அரசு பேருந்து

தமிழகத்தில் 200 கிமீக்கு மேல் அரசு பேருந்துகளில் பயணிப்பவர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்  முன்பதிவு செய்து கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்கள், வடதமிழகத்தில் இருந்து தென் தமிழகம் என நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தொலைதூரப் பயணங்களுக்கு நடுத்தர மக்களின் ஒரே சாய்ஸ் ரயில்கள் தான். ஆனால் ரயில்களை பொறுத்தவரை முன்பதிவு என்பது தொடங்குவதற்கு முன்னாலேயே முடிந்து விடுகிறது. அதற்கு அடுத்தபடியாக குறைவான செலவில் நீண்ட தூரம் பயணம் செய்ய அரசு பேருந்துகள் தான் எளிமையானவை.

இதனை மொபைல் செயலிகள் மூலமாக முன்பதிவு செய்யும் வசதி இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இவர்களின் குறைகளை போக்கும் வகையிலும்  பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும்  அரசு பேருந்துகளிலும் ஒரு மாதத்திற்கு முன் இருக்கைகளை ஆன்லைன் மற்றும் செல்போன் மூலமாக முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

அரசு பேருந்து
 
இதன் மூலம் தினசரி சுமார் 60,000 பயணிகளில் 20,000 பயணிகள் வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வசதியினை அரசு பேருந்துகளில் 200 கி.மீ. தூரத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக விரிவு படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலத்திலிருந்து பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு  சேவை விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு பேருந்து

இதன் காரணமாக தற்போது ஒரு நாளைக்கான முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி 51,046 இருக்கைகளிலிருந்து 62,464 இருக்கைகள் வரை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.  அரசு விரைவு பேருந்துகளில் மட்டுமே முன்பதிவு செய்யும் வசதி இருந்தது. தற்போது   200 கிமீட்டர் தூரம் செல்லும் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது . இந்த வசதியை பெற  tnstc.in மற்றும் tnstc mobile app மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பேருந்து பயணிகள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web